கன்னட எழுத்தாளரும் சரஸ்வதி சம்மன் விருது பெற்றவருமான S.L. பைரப்பா அவரது 94 வது வயதில் காலமானார்.
அவரது முதல் புதினமான பீமகாயா 1958 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
பெண்களின் பார்வையில் இராமாயணத்தை மீண்டும் எடுத்துரைத்த உத்தரகாண்டா (2017) எனும் அவரது கடைசி புதினத்துடன் அவர் 25 புதினங்களை எழுதியுள்ளார்.
மகாபாரதத்தின் மறுகதையான பர்வா (1979), வம்சவ்ரிக்சா (1965) மற்றும் க்ருஹ பங்கா (1970) ஆகிய அவரது புதினங்கள் கன்னட இலக்கியத்தின் மிக உன்னதமான படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
2010 ஆம் ஆண்டில் தனது மந்த்ரா (2001) புதினத்திற்காக சரஸ்வதி சம்மான் விருதை வென்றார்.
அவருக்கு 2023 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.