TNPSC Thervupettagam
October 22 , 2025 14 days 78 0
  • 45,924 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 980,340 மாணவர்களின் கற்றல் சார்ந்த விளைவுகளை மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு (SLAS) 2025 மதிப்பீடு செய்தது.
  • மதிப்பீட்டு வடிவமைப்பிற்காக ப்ளூமின் என்ற வகை பிரிப்பைப் பயன்படுத்தி, தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் இந்தக் கணக்கெடுப்பு கவனம் செலுத்தியது.
  • 3 ஆம் வகுப்பு அளவிலான மாநில சராசரி மதிப்பெண்கள் தமிழ் 67%, ஆங்கிலம் 69%, கணிதம் 54%, மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் 76% ஆகும்.
  • 5 ஆம் வகுப்பு அளவிலான மாநில சராசரி மதிப்பெண்கள் தமிழ் 76%, ஆங்கிலம் 51%, கணிதம் 57%, மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் 57% ஆகும்.
  • 8 ஆம் வகுப்பு அளவிலான மாநில சராசரி மதிப்பெண்களில் தமிழ் 52%, ஆங்கிலம் 39%, கணிதம் 38%, அறிவியல் 37% மற்றும் சமூக அறிவியல் 54% என்ற சரிவுகள் பதிவாகின.
  • மாவட்ட வாரியான பகுப்பாய்வு ஆனது, 22 மாவட்டங்கள் ஆனது மாநில சராசரியை விட அதிகமாகவும், 15 மாவட்டங்கள் அனைத்துப் பாடங்களிலும் குறைவாகவும் செயல்பட்டதைக் காட்டியது.
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 2025 ஆம் ஆண்டு மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பில் (SLAS) மதுரை மாவட்டம் ஒட்டு மொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • கன்னியாகுமரி 66.5% உடன் மாநிலம் அளவில் முன்னிலை வகிப்பதுடன், தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் பிற மாவட்டங்களில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் சிவகங்கை ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்