நாசா மற்றும் பிற சர்வதேச சூரிய இயற்பியலாளர்கள், நியூ மெக்ஸிகோவிலிருந்து ஓர் அதி திறன் வாய்ந்த ஒருங்கிணைந்த சூரிய உமிழ்வு புல நிறமாலை வரைவி (Solar EruptioN Integral Field Spectrograph- SNIFS) சோதனை ஏவு கலத்தினை விண்ணில் ஏவ உள்ளனர்.
அதன் அதி திறன் வாய்ந்த ஏவு கலமானது சூரிய வளிமண்டலத்தின் மிகவும் சிக்கலான பகுதியான நிற மண்டலத்தினை ஆய்வு செய்வதற்காக புதிய வாய்ப்பினை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
SNIFS என்பது சூரியனை ஆய்வு செய்வதற்காக வேண்டி விண்ணில் ஏவப்பட்ட முதல் ஒருங்கிணைந்த புற ஊதா புல நிறமாலைமானி ஆகும்.
சூரியனின் புலப்படும் மேற்பரப்புக்கும் (ஃபோட்டோஸ்பியர்-ஒளிமண்டலம்) அதன் மில்லியன் டிகிரி வெப்பத்திலான கொரோனா பகுதிக்கும் இடையில் உள்ள ஒரு மெல்லிய, சிவப்பு நிற அடுக்கு நிற மண்டலம்-குரோமோஸ்பியர் ஆகும்.
இது சூரிய சுடர்கள், பிளாஸ்மா பாய்வுகள் மற்றும் தீவிர ஆற்றல் ஓட்டங்களைக் கொண்டுள்ளது.