TNPSC Thervupettagam
October 29 , 2025 15 hrs 0 min 45 0
  • 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை டிஜிட்டல் சார்ந்த எதிர்காலத்திற்கு ஏற்ப இந்தியாவை தயார் படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தயார்நிலைக்கான திறன் கட்டமைப்புத் (SOAR) திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நெறிமுறை சார்ந்த AI பயன்பாடு மற்றும் அடிப்படை இயந்திரக் கற்றல் கருத்துகளில் கவனம் செலுத்தும் மாணாக்கர் மற்றும் கல்வியாளர்களுக்கான மாதிரிகளை SOAR வழங்குகிறது.
  • 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான சிறப்பு செயற்கை நுண்ணறிவு மையத்தினை நிறுவ 500 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
  • SOAR ஆனது டிஜிட்டல் திறன்கள், AI சார்ந்த கல்வியறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக திறன் இந்தியா திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) 4.0 ஆகியவற்றுடன் இணைக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்