TNPSC Thervupettagam

SoLAR திட்டத்தின் இரண்டாம் கட்டம்

December 2 , 2025 3 days 63 0
  • SoLAR திட்டத்தின் இரண்டாம் கட்டம் (வேளாண்மையில் மீள்தன்மைக்கான சூரிய சக்தி சார் நீர்ப்பாசனம்) சுவிட்சர்லாந்து மேம்பாட்டு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (SDC) ஆதரவுடன் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் (IWMI) தலைமையில் செயல் படுகிறது.
  • சிறு விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசன வசதியை விரிவு படுத்துவதும், வேளாண்மையில் பருவநிலை மீள்தன்மை, நீர்ப் பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி ப்பயன்பாட்டை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டம் இந்தியா, வங்காளதேசம், கென்யா மற்றும் எத்தியோப்பியாவில் சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்துகிறது.
  • சூரிய நீர்ப்பாசனத்திற்கான கொள்கைகளை உருவாக்க இது முதலாம் கட்டத்தில் இருந்து (2019–2025) பெறப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்துகிறது.
  • விவசாயிகள் சூரிய சக்தியில் இயங்கும் நீரேற்றிகளை Pay-as-You-go (PAYG), நுண் நிதி மற்றும் கலப்பு நிதி திட்டங்கள் மூலம் அணுகலாம்.
  • இந்தத் திட்டம் விவசாயிகள் மற்றும் உள்ளூர் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசன அமைப்புகளை நிறுவவும் பராமரிக்கவும் பயிற்சி அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்