ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது உணவு மற்றும் வேளாண்மைக்கான ‘உலகின் நிலம் மற்றும் நீர் வளங்களின் நிலை – உடைபடும் நிலையில் இருக்கும் முறைமை குறித்த தொகுப்பு அறிக்கை (2021)’ என்ற ஒரு அறிக்கையினை வெளிட்டது.
இந்த அறிக்கையானது, 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகை 10 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மக்கள்தொகைக்கு உணவளிப்பதில் புவியின் மண், நிலம் மற்றம் நீர்வளங்களின் மோசமான நிலையினையும் அது முன் வைக்கும் சவால்களையும் எடுத்துரைக்கிறது.
SOLAW 2021 என்ற அறிக்கையின் மையக் கருப்பொருள் ‘உடைபடும் நிலையில் உள்ள முறைமைகள்‘ (Systems at breaking point) என்பதாகும்.
தற்போதைய நிலை:
நிலம், மண் மற்றும் நீர் ஆகியவற்றின் மீது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகள் அதன் அதிகபட்ச வரம்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
தீவிர வேளாண்மையின் தற்போதைய வடிவங்கள் நிலையானதாக இல்லை.