உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, “உணவு மற்றும் வேளாண்மைக்கான உலகிலுள்ள நிலம் மற்றும் நீர் வளங்களின் நிலை குறித்த அறிக்கை (SOLAW) 2025 -The State of the World’s Land and Water Resources for Food and Agriculture (SOLAW) 2025” என்ற அறிக்கையை வெளியிட்டது.
வேளாண் நிலங்களை விரிவுபடுத்தாமல், 25% அதிக நன்னீரைப் பயன்படுத்தி 2050 ஆம் ஆண்டிற்குள் 50% அதிக உணவு, தீவனம் மற்றும் நார்ச்சத்து பொருட்கள் உற்பத்தி செய்ய வேண்டியதற்கு வேளாண்மைக்கு உள்ள அவசியத்தை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
மனிதனால் ஏற்படும் நிலச் சீரழிவில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை வேளாண் நிலங்களில் நிகழ்கின்றன என்பதோடு மேலும் உலகளாவிய நன்னீர்ப் பயன்பாட்டில் வேளாண்மையின் பங்கு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இந்தியாவில், கோரக்பூரில் மேற்கொள்ளப் பட்ட பயனுள்ள நுண்ணுயிரி மேலாண்மை விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தது அதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசமானது சமூகப் பிரிவுகளால் நிர்வகிக்கப்பட்ட இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை ஆதரிப்பதற்கு விவசாயி களப் பள்ளிகளைப் பயன்படுத்தியது.