TNPSC Thervupettagam

SOLVE தரைவழிச் சோதனை – ககன்யான்

July 8 , 2026 17 hrs 0 min 16 0
  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC) SOLVE (சோதனைகளுக்கான துணை-சுற்றுப்பாதை ஏவுதல் வாகனம்) திட மின்னியற்றியை இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • ககன்யான் திட்டத்தின் குழு தொகுதிக்கான, பாராசூட் அடிப்படையிலான வேகக் குறைப்பு அமைப்பைச் சரிபார்க்கும் ஒரு சோதனைத் தளமாக SOLVE உருவாக்கப்பட்டு வருகிறது.
  • SOLVE-இல் பயன்படுத்தப்படும் திட மின்னியற்றியானது, துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (PSLV) 'ஸ்ட்ராப்-ஆன்' (strap-on) மின்னியற்றியில் இருந்து சில மாற்றங்களுடன் பெறப்பட்டது.
  • ககன்யான் என்பது இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும், இது மூன்று விண்வெளி வீரர்களை 400 கி.மீ தாழ் புவி சுற்றுப்பாதைக்கு (LEO) மூன்று நாட்களுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தில் மனிதப் பயணத்திற்கு உகந்த LVM3 (HLVM3), குழு தப்பிக்கும் அமைப்பு (CES), சுற்றுப்பாதை தொகுதி (OM), குழு தொகுதி (CM) மற்றும் சேவை தொகுதி (SM) ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்