ஒரு நபர் உயரமான இடங்களில் உயிர் வாழ்வதற்கான தாங்குதிறனைச் சோதிக்கச் செய்வதற்காக இந்தியாவில் 'Soul of Steel' என்ற சவால் தொடங்கப்பட உள்ளது.
இது உத்தரகாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள ஒரு முன்னெடுப்பு ஆகும்.
முன்னாள் வீரர்களால் நடத்தப்படும் CLAW குளோபல் என்ற ஒரு துணீகர முதலீட்டு நிறுவனத்தினால் நடத்தப் படுகின்ற இந்த நிறுவனத்திற்கு இந்திய இராணுவம் உதவிகளை வழங்குகிறது.
இந்தச் சாதனையானது ஐரோப்பாவில் மேற்கொள்ளப் படும் 'அயர்ன்மேன் டிரையத்லான்' என்ற ஒரு தனிநபரின் மன உறுதியையும் தாங்குதிறனையும் சோதிக்கின்ற நீண்ட தூர டிரையத்லான் சவாலினை ஒத்துள்ளது.