TNPSC Thervupettagam

SpaDeX திட்டம் - இரண்டாவது விண்கலமிணைப்பு

May 2 , 2025 19 days 84 0
  • இஸ்ரோ நிறுவனமானது, தனது விண்கலமிணைப்புப் பரிசோதனை (SpaDeX) ஆய்வு செயற்கைக் கோள்கள் இரண்டாவது விண்கலமிணைப்புப் பரிசோதனையினை மிக வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
  • SpaDeX ஆனது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று ஒன்றாக விண்ணில் ஏவப் பட்ட SDX01 (சேசர்) மற்றும் SDX02 (டார்கெட்) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை உள்ளடக்கியதாகும்.
  • இந்தச் செயற்கைக்கோள்கள் ஆனது, ஜனவரி 16 ஆம் தேதியன்று முதல் முறையாக வெற்றிகரமாக இணைக்கப்பட்டு மார்ச் 13 ஆம் தேதியன்று பிரிக்கப்பட்டது.
  • இச்சாதனையானது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளுக்கு அடுத்த படியாக இத்தகைய ஒரு தொழில்நுட்பச் சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்