இஸ்ரோ நிறுவனமானது, தனது விண்கலமிணைப்புப் பரிசோதனை (SpaDeX) ஆய்வு செயற்கைக் கோள்கள் இரண்டாவது விண்கலமிணைப்புப் பரிசோதனையினை மிக வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
SpaDeX ஆனது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று ஒன்றாக விண்ணில் ஏவப் பட்ட SDX01 (சேசர்) மற்றும் SDX02 (டார்கெட்) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை உள்ளடக்கியதாகும்.
இந்தச் செயற்கைக்கோள்கள் ஆனது, ஜனவரி 16 ஆம் தேதியன்று முதல் முறையாக வெற்றிகரமாக இணைக்கப்பட்டு மார்ச் 13 ஆம் தேதியன்று பிரிக்கப்பட்டது.
இச்சாதனையானது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளுக்கு அடுத்த படியாக இத்தகைய ஒரு தொழில்நுட்பச் சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது.