TNPSC Thervupettagam
February 14 , 2020 1975 days 798 0
  • மத்தியப் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது, தற்போதுள்ள SPICe என்ற படிவத்தை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக  ‘SPICe+’ என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய வலைதளப் படிவத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
  • எளிதில் தொழில் தொடங்குதலை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
  • SPICe+ ஆனது ஒரு ஒருங்கிணைந்த வலைதளப் படிவமாக இருக்கும்.
  • SPICe+ ஆனது 10 விதமான சேவைகளைப் பின்வரும் 3 மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலமாக வழங்குகின்றது.
    • மத்தியப் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்,
    • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
    • மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்  துறை
    • ஒரு மாநில அரசு (மகாராஷ்டிரா). இவை மூலம் இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான பல நடைமுறைகள், நேரம் மற்றும் செலவு ஆகியவை குறைக்கப் படுகின்றது.
  • இது புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள அனைத்துப் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்