காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (KVIC - Khadi and Village Industries Commission) இந்தியாவின் செயல்திறனை வலுப்படுத்தும் திட்டம் (Strengthening the potential of India – SPIN) ஒன்றினைத் தொடங்கியுள்ளது.
இது நலிவடைந்த குயவர்களுக்கு அவர்களுக்கான உரிமையை வழங்கும் விதமாக SFURTI எனும் திட்டத்தின் கீழ் வாரணாசியில் ஒரு மட்பாண்டத் தொழில் பகுதியினை அமைத்துள்ளது.
SPIN திட்டமானது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குயவர்களைத் தன்னிறைவுப் பெறச்செய்யும் ஒரு மானியமில்லாத திட்டமாகும்.
இதில் பதிவு செய்யப்பட்ட குயவர்கள் பிரதான் மந்திரி சிசு முத்ரா யோஜனாவின் கீழ் வங்கிகளிலிருந்து நேரடியாக கடன் பெற இது உதவுகிறது.
SPIN திட்டத்தின் கீழ், RBL வங்கியின் மூலமாக குயவர்களுக்கு நிதி உதவியையும் கைவினைக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதையும் KVIC வழங்கி வருகிறது.
இத்திட்டத்திற்கான செலவு என்பது அரசுக் கருவூலத்திலிருந்துப் பெறப்படாது.
இந்தக் கடனைச் சுலபத் தவணையின் மூலமாக குயவர்களேத்தருப்பிச் செலுத்துவர்.