ஐதராபாத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (CCMB) அறிவியலாளர்கள், செல் இயக்கத்தில் SPIN90 புரதத்தின் முக்கியப் பங்கைக் கண்டறிந்தனர்.
செல்கள் நகரவும் அதன் வடிவத்தை மாற்றவும் எவ்வாறு தங்கள் உள் அமைப்பை மாற்றியமைக்கின்றன என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.
வெள்ளை இரத்த அணுக்கள் போன்ற செல்கள் நோய்க் கிருமிகளைத் துரத்தவும் அழிக்கவும் விரைவான நீட்சிகளை உருவாக்க SPIN90 உதவுகிறது.