TNPSC Thervupettagam
July 4 , 2025 14 hrs 0 min 39 0
  • சில பதிவு செய்யப்படாத முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை ESI சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது SPREE திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
  • SPREE என்பது முதலாளிகள்/பணியாளர்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான முக்கியத் திட்டத்தைக் குறிக்கிறது.
  • புதுப்பிக்கப்பட்ட SPREE திட்டம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும்.
  • தற்காலிக, முறைசாரா மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தானாக முன்வந்து பதிவு செய்வதற்கான ஒற்றை வாய்ப்பை இது வழங்குகிறது.
  • பதிவு செய்பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதிவு தேதி அல்லது உண்மையில் அவர்கள் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து காப்பீடு பெறுவார்கள்.
  • இது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் 2025 ஆம் ஆண்டு நிலுவை வரித் தாக்கல்களையும் செலுத்துவதற்கான ஒரு அவகாசத் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியது.
  • இது முதலாளிகள் பழைய வழக்குகளைத் தீர்த்து வைக்கவும் பல சட்ட சிக்கல்களைக் குறைக்கவும் வழி வகுக்கிறது.
  • முதல் முறையாக, நிலுவை வரி செலுத்தல் கால அவகாசச் சட்டமானது வட்டி மற்றும் இழப்பீடுகளுடன் கூடிய வழக்குகளை உள்ளடக்கியுள்ளது என்பதோடு அந்த நிலுவைத் தொகைகள் செலுத்தப்பட்டால் நீதிமன்ற வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்யவும் அனுமதிக்கிறது.
  • தாமதமான கொடுப்பனவுகளுக்கு ஆண்டிற்கு சுமார் 25% வரை என்ற பழைய அபராத விகிதங்களுக்கு மாற்றாக ஒரு புதிய விதியானது சுமார் 1% மாதாந்திர அபராதத்தை நிர்ணயிக்கிறது.
  • ESIC ஆனது அதன் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய ஆயுஷ் கொள்கையையும் அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்