சமூக பாதுகாப்பை வலுப்படுத்தவும் இணக்கத்தை எளிதாக்கவும் ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) SPREE-2025 மற்றும் அவகாசத் திட்டம்-2025 ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
ESIC பரவலை விரிவுபடுத்துதல், தன்னார்வப் பதிவை ஊக்குவித்தல், வழக்காடலைக் குறைத்தல் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.
SPREE-2025 (முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான திட்டம்) 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும்.
SPREE-2025 திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த கால நிலுவைத் தொகைகளுக்குப் பொறுப்பேற்காமல் ESI தளம், ஷ்ரம் சுவிதா தளம் அல்லது நிறுவன விவகாரத் தளம் வழியாக ESIC கழகத்தில் சேரலாம்.
அவகாசத் திட்டம்-2025 ஆனது இழப்பீடுகள், வட்டி மற்றும் ESI சட்டப் பரவல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் செயல்படும்.
நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கும் சட்ட இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் இது முதலாளிகளுக்கு ஒற்றை முறை வாய்ப்பை வழங்குகிறது.