சில பதிவு செய்யப்படாத முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை ESI சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது SPREE திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
SPREE என்பது முதலாளிகள்/பணியாளர்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான முக்கியத் திட்டத்தைக் குறிக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட SPREE திட்டம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும்.
தற்காலிக, முறைசாரா மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தானாக முன்வந்து பதிவு செய்வதற்கான ஒற்றை வாய்ப்பை இது வழங்குகிறது.
பதிவு செய்பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதிவு தேதி அல்லது உண்மையில் அவர்கள் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து காப்பீடு பெறுவார்கள்.
இது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் 2025 ஆம் ஆண்டு நிலுவை வரித் தாக்கல்களையும் செலுத்துவதற்கான ஒரு அவகாசத் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியது.
இது முதலாளிகள் பழைய வழக்குகளைத் தீர்த்து வைக்கவும் பல சட்ட சிக்கல்களைக் குறைக்கவும் வழி வகுக்கிறது.
முதல் முறையாக, நிலுவை வரி செலுத்தல் கால அவகாசச் சட்டமானது வட்டி மற்றும் இழப்பீடுகளுடன் கூடிய வழக்குகளை உள்ளடக்கியுள்ளது என்பதோடு அந்த நிலுவைத் தொகைகள் செலுத்தப்பட்டால் நீதிமன்ற வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்யவும் அனுமதிக்கிறது.
தாமதமான கொடுப்பனவுகளுக்கு ஆண்டிற்கு சுமார் 25% வரை என்ற பழைய அபராத விகிதங்களுக்கு மாற்றாக ஒரு புதிய விதியானது சுமார் 1% மாதாந்திர அபராதத்தை நிர்ணயிக்கிறது.
ESIC ஆனது அதன் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய ஆயுஷ் கொள்கையையும் அங்கீகரித்தது.