SRP திட்டத்தில் கங்கை நீர் முதலை மற்றும் தேன் உண்ணும் கரடி
July 16 , 2025 15 hrs 0 min 43 0
தேசிய வனவிலங்கு வாரியத்தின் (SC-NBWL) நிலைக் குழுவானது, உயிரின மீட்புத் திட்டத்தில் கங்கை நீர் முதலை (சொம்பு மூக்கு முதலை) மற்றும் தேன் உண்ணும் கரடியைச் சேர்ப்பதற்குப் பரிந்துரைத்தது.
இது வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டத்தின் (CSS-IDWH) கீழ் செயல்படுத்தப்படுகிறது.
SC-NBWL ஆனது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது.
கங்கை நீர் முதலை / கரியல் நன்னீர் நதிகளில் முக்கியமாக இந்தியாவில் கங்கை நதி மற்றும் நேபாளத்தில் உள்ள ரப்தி-நர்யானி நதியின் துணை நதிகளில் வாழ்கிறது.
இது IUCN அமைப்பினால் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள ஒரு இனமாக வகைப் படுத்தப் பட்டுள்ளது.
இது அருகி வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் இணைப்பு I பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
அனைத்து முதலை இனங்களிலும் கங்கை நீர் முதலையானது மிக மெல்லிய மற்றும் நீளமான மூக்கைக் கொண்டுள்ளது.
தேன் உண்ணும் கரடியானது ஒரு சிறிய விலங்கு, தனித்து வாழும், பொதுவாக இரவு நேரங்களில் வாழும் விலங்கு ஆகும்.
இது இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டது.
இது தீபகற்ப இந்தியா, மேற்குத் தொடர்ச்சி மலைகள், தக்காணப் பீடபூமி, கங்கைச் சமவெளி மற்றும் வடகிழக்கு போன்ற இந்தியாவில் உள்ள ஐந்து உயிர் புவியியல் மண்டலங்களில் வாழ்கிறது.
தேன் உண்ணும் கரடியானது IUCN அமைப்பினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I மற்றும் CITES உடன்படிக்கையின் இணைப்பு I பகுதியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
CSS-IDWH அந்து வனவிலங்கு வளங்காப்பிற்காக மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச (UT) அரசாங்கங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.
இது வரை, பனிச் சிறுத்தை, ஆசிய சிங்கம் மற்றும் கான மயில் உட்பட 22 இனங்கள் ஆனது இனங்கள் மீட்பு திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன.