TNPSC Thervupettagam

SRS 2023 அறிக்கை

September 9 , 2025 16 hrs 0 min 56 0
  • 2023 ஆம் ஆண்டு மாதிரிப் பதிவு கணக்கெடுப்பு (SRS) புள்ளிவிவர அறிக்கையின் படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2023 ஆம் ஆண்டில் 1.9 ஆகக் குறைந்து உள்ளது.
  • இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இது 2.1 என்ற மாற்றீடு அளவிற்கும் கீழே சரிந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் 19.1 ஆக இருந்த பிறப்பு விகிதம் (CBR) ஆனது 2023 ஆம் ஆண்டில் 18.4 ஆகக் குறைந்தது.
  • பெரிய மாநிலங்களில், பீகாரில் 25.8 என்ற மிக அதிக CBR விகிதமும், 2.8 என்ற மிக அதிக TFR விகிதமும் பதிவாகின, அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 12 என்ற மிகக் குறைந்த CBR விகிதம் பதிவானது.
  • டெல்லி 1.2 என்ற மிகக் குறைந்த TFR பதிவானது, அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் (1.3), தமிழ்நாடு (1.3) மற்றும் மகாராஷ்டிரா (1.4) இடம் பெற்றுள்ளன.
  • மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் 2023 ஆம் ஆண்டில் 2.1 என்ற மாற்றீடு அளவை விடக் குறைவான TFR விகிதங்களைக் கொண்டிருந்தன.
  • 2023 ஆம் ஆண்டில் இறப்பு விகிதம் ஆனது 6.4 ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது முந்தைய ஆண்டை விட 0.4 புள்ளிகள் குறைவு ஆகும்.
  • குழந்தை இறப்பு விகிதம் (IMR) 2023 ஆம் ஆண்டில் 1 புள்ளி குறைந்து 1,000 பிறப்புகளுக்கு 25 இறப்புகளாகப் பதிவானது.
  • பிறப்பின் போதான பாலின விகிதம் (SRB) 1,000 ஆண் குழந்தைகளுக்கு 917 பெண் குழந்தைகளாக மேம்பட்டது, கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் முறையே 971 மற்றும் 974 என்ற அதிகபட்ச SRB விகிதம் பதிவானது.
  • உத்தரகாண்டில் 868 என்ற மிகக் குறைந்த SRB பதிவானது, மேலும் 2020 ஆம் ஆண்டில் 964 ஆக இருந்த பீகாரின் SRB, 897 ஆக சற்று உயர்ந்தது.
  • முதியோர் எண்ணிக்கை (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) தேசிய அளவில் 9.7% ஆக அதிகரித்துள்ளது என்பதோடு கேரளாவில் அதிகபட்சமாக 15% பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்