2023 ஆம் ஆண்டு மாதிரிப் பதிவு கணக்கெடுப்பு (SRS) புள்ளிவிவர அறிக்கையின் படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2023 ஆம் ஆண்டில் 1.9 ஆகக் குறைந்து உள்ளது.
இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இது 2.1 என்ற மாற்றீடு அளவிற்கும் கீழே சரிந்தது.
2022 ஆம் ஆண்டில் 19.1 ஆக இருந்த பிறப்பு விகிதம் (CBR) ஆனது 2023 ஆம் ஆண்டில் 18.4 ஆகக் குறைந்தது.
பெரிய மாநிலங்களில், பீகாரில் 25.8 என்ற மிக அதிக CBR விகிதமும், 2.8 என்ற மிக அதிக TFR விகிதமும் பதிவாகின, அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 12 என்ற மிகக் குறைந்த CBR விகிதம் பதிவானது.
டெல்லி 1.2 என்ற மிகக் குறைந்த TFR பதிவானது, அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் (1.3), தமிழ்நாடு (1.3) மற்றும் மகாராஷ்டிரா (1.4) இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் 2023 ஆம் ஆண்டில் 2.1 என்ற மாற்றீடு அளவை விடக் குறைவான TFR விகிதங்களைக் கொண்டிருந்தன.
2023 ஆம் ஆண்டில் இறப்பு விகிதம் ஆனது 6.4 ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது முந்தைய ஆண்டை விட 0.4 புள்ளிகள் குறைவு ஆகும்.
குழந்தை இறப்பு விகிதம் (IMR) 2023 ஆம் ஆண்டில் 1 புள்ளி குறைந்து 1,000 பிறப்புகளுக்கு 25 இறப்புகளாகப் பதிவானது.
பிறப்பின் போதான பாலின விகிதம் (SRB) 1,000 ஆண் குழந்தைகளுக்கு 917 பெண் குழந்தைகளாக மேம்பட்டது, கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் முறையே 971 மற்றும் 974 என்ற அதிகபட்ச SRB விகிதம் பதிவானது.
உத்தரகாண்டில் 868 என்ற மிகக் குறைந்த SRB பதிவானது, மேலும் 2020 ஆம் ஆண்டில் 964 ஆக இருந்த பீகாரின் SRB, 897 ஆக சற்று உயர்ந்தது.
முதியோர் எண்ணிக்கை (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) தேசிய அளவில் 9.7% ஆக அதிகரித்துள்ளது என்பதோடு கேரளாவில் அதிகபட்சமாக 15% பதிவாகி உள்ளது.