TNPSC Thervupettagam

SSR மற்றும் SRIMAN வழிகாட்டுதல்கள்

May 16 , 2022 1104 days 477 0
  • தொழில்நுட்பத் தினத்தை முன்னிட்டு SSR மற்றும் SRIMAN ஆகிய வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டன.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சூழல் அமைப்பைச் சமூகத் தேவைகளுக்குப் பங்களிக்கச் செய்யும் வகையில் அறிவியல் மற்றும் சமூக இணைப்புகளை வலுப் படுத்தச் செய்வதற்கு அறிவியல் சமூகப் பொறுப்பு (SSR) இன்றியமையாததாகும்.
  • இந்த வழிகாட்டுதல்கள் முதன்மையாக அறிவியல்-சமூகம், அறிவியல்-அறிவியல் மற்றும் சமூகம்-அறிவியல் ஆகியவை இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதை உள்ளடக்கியது.
  • இதன் மூலம் சமூக இலக்குகளை அடைவதற்கு விரைவான விதத்தில் அறிவியலின் நம்பகத் தன்மை, கூட்டாண்மை மற்றும் பொறுப்பை வெளிக் கொணர முடியும்.
  • SRIMAN என்பது அறிவியல் ஆராய்ச்சி உள்கட்டமைப்புப் பகிர்வு மேலாண்மை மற்றும் கட்டமைப்புகள் (Scientific Research Infrastructure Sharing Maintenance and Networks) என்பதன் சுருக்கமாகும்.
  • இந்த வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் உள்ள அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆராய்ச்சி உள்கட்டமைப்பினைத் திறன்மிக்க முறையில் பயன்படுத்துதல் மற்றும் பரவலான முறையில் அணுகச் செய்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்