தொழில்நுட்பத் தினத்தை முன்னிட்டு SSR மற்றும் SRIMAN ஆகிய வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சூழல் அமைப்பைச்சமூகத் தேவைகளுக்குப் பங்களிக்கச் செய்யும் வகையில் அறிவியல் மற்றும் சமூக இணைப்புகளை வலுப் படுத்தச் செய்வதற்கு அறிவியல் சமூகப் பொறுப்பு (SSR) இன்றியமையாததாகும்.
இந்த வழிகாட்டுதல்கள் முதன்மையாக அறிவியல்-சமூகம், அறிவியல்-அறிவியல் மற்றும் சமூகம்-அறிவியல் ஆகியவை இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதை உள்ளடக்கியது.
இதன் மூலம் சமூக இலக்குகளை அடைவதற்கு விரைவான விதத்தில் அறிவியலின் நம்பகத் தன்மை, கூட்டாண்மை மற்றும் பொறுப்பை வெளிக் கொணர முடியும்.
SRIMAN என்பது அறிவியல் ஆராய்ச்சி உள்கட்டமைப்புப்பகிர்வு மேலாண்மை மற்றும் கட்டமைப்புகள் (Scientific Research Infrastructure Sharing Maintenance and Networks) என்பதன் சுருக்கமாகும்.
இந்த வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் உள்ள அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆராய்ச்சி உள்கட்டமைப்பினைத் திறன்மிக்க முறையில் பயன்படுத்துதல் மற்றும் பரவலான முறையில் அணுகச் செய்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.