ரஷ்யாவுடனான பிரச்சினைகள் அதிகரித்து வருவதையடுத்து ஐரோப்பாவில் “SteadfastDefender 21 war games” எனும் ஒரு இராணுவப் பயிற்சியினை வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது (North Atlantic Treaty Organisation – NATO) ஏற்பாடு செய்துள்ளது.
இதில் NATOவின் படைகள், போர்க்கப்பல்கள் மற்றும் டஜன் கணக்கான விமானங்கள் பங்கேற்கின்றன.
அட்லாண்டிக் பெருங்கடலினூடே ஐரோப்பாவின் வழியாக கருங்கடல் பகுதி வரை இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்தப் பயிற்சியானது தனது உறுப்பினர்களில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப் பட்டாலும் 30 நாட்டு இராணுவ அமைப்புகளும் எதிர்த்துச் செயல்படும் என்பதை உணர்த்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.