மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆனது STELLAR மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
லான்டாவ் குழுமத்துடன் (TLG) இணைந்து உருவாக்கப்பட்ட இது ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ADB) ஆதரவில் மேற்கொள்ளபப்டுகிறது.
STELLAR என்பது அதிநவீன, முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வளங்களின் போதுமான இருப்பு நிலையினை மதிப்பிட்டு உறுதி செய்யும் மாதிரியமைப்பாகும்.
இது முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் வளங்களின் போதுமான இருப்பு நிலையினை மதிப்பிட்டு உறுதி செய்யும் மாதிரியாகும்.
இது மின் உற்பத்தி, பரிமாற்றம், சேமிப்பு மற்றும் தேவை வழங்கீடு நடவடிக்கை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திட்டமிடலுக்கான அடுத்த தலைமுறை நுட்பத்திலான மென்பொருள் கருவியாகும்.
இது மாநிலங்கள் முழுவதும் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் சேமிப்புத் திட்டமிடலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.