TNPSC Thervupettagam

SUJVIKA - AI உயிரித்தொழில்நுட்ப தரவு தளம்

February 28 , 2026 18 days 80 0
  • உயிரித்தொழில்நுட்ப துறையானது (DBT), அதன் 40வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 25, 2026 அன்று, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான உயிரித் தொழில்நுட்ப தயாரிப்பு தரவு தளமான “SUJVIKA” ஐ அறிமுகப்படுத்தியது.
  • இது உயிரித் தொழில்நுட்ப இறக்குமதிகள் குறித்த கட்டமைக்கப்பட்ட தரவை வழங்கும் வர்த்தகப் புள்ளி விவர டிஜிட்டல் நுண்ணறிவு தளமாகும்.
  • உள்நாட்டு உயிரி உற்பத்தியை ஆதரிப்பதற்கும் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதற்கும் அதிக மதிப்புள்ள மற்றும் அதிக அளவு இறக்குமதிகளை அடையாளம் காண இந்தத் தளம் உதவுகிறது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் 1986 ஆம் ஆண்டு DBT நிறுவப் பட்டது.
  • இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம் 2014 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து (USD) 2024 ஆம் ஆண்டில் சுமார் 165.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்