மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல சபையின் 16வது மாநாட்டில் 'சுமன் செயல்வரை திட்டம் 2030' வெளியிடப் பட்டது.
இது இந்தியாவில் தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு உத்திசார் கட்டமைப்பாகும்.
இது RMNCHA+N (இனப்பெருக்க, தாய், பச்சிளம் குழந்தை, குழந்தை, வளரிளம் பருவத்தினர் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து) அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் தாய்மார் இறப்பு விகிதத்தை (MMR) 1 லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 70-க்குக் கீழ் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (NMR) மற்றும் குழந்தை இறப்பு விகிதம் (IMR) ஆகியவற்றைக் குறைப்பதையும் இது இலக்காகக் கொண்டுள்ளது.
இது இலக்கு அடிப்படையிலான தலையீடுகளுக்காக 13 அதிகக் கவனம் செலுத்தப் படும் மாநிலங்களில் உள்ள 130 மாவட்டங்களை உள்ளடக்கியது.
இதில் டிஜிட்டல் கண்காணிப்பு, அவசர மகப்பேறு பராமரிப்பு மற்றும் அதிக ஆபத்து உள்ள கர்ப்பங்களைக் கண்காணிப்பது ஆகியவை அடங்கும்.