அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, உபகரணங்களின் மேம்பாடு, தடுப்பு முறையிலான (முன்கூட்டிய) பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பிற்கான (SUPREME) ஆதரவு என்ற முன்னெடுப்பினைச் சமீபத்தில் தொடங்கியது.
இது அந்த அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் உருவாக்கப்பட்டப் பகுப்பாய்வுக் கருவி மையங்களை (AIFs) மேம்படுத்தச் செய்தல் மற்றும் பராமரிப்பதற்கான நிதி உதவி போன்றவற்றை வழங்க முயல்கிறது.
இது பழுதுபார்த்தல், மேம்படுத்துதல், பராமரித்தல், மறுசீரமைப்பு செய்தல் அல்லது கூடுதல் இணைப்புகளைப் பெறுதல் ஆகியவற்றிக்கு நிதி உதவியை விரிவு படுத்தச் செய்வதற்கான ஒரு முதல்-வகையான திட்டமாகும்.
இதில் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
அனைத்துத் தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் இத்திட்டத்தில் நிதியளிப்பதற்கான முறைமை 75:25 என்ற வீதத்தில் இருக்கும்.