இஸ்ரேலுடனான 12 நாட்கள் அளவிலானப் போருக்குப் பிறகு ஈரான் தனது முதல் இராணுவப் பயிற்சியை நடத்தியது.
ஓமன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள கடல் சார் இலக்குகளில் சீர்வேக எறிகணைகள் ஏவப்பட்டன.
முக்கிய கடல்சார் மண்டலங்களில் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
வான் வழிப் பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் தளங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு அதன் வலிமையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.