“நாட்டு” (பூர்வீக) மாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக SUTRA PIC என்ற ஒரு திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
SUTRA PIC ஆனது “ஆராய்ச்சி வளர்ச்சியின் மூலம் அறிவியல்சார் பயன்பாடு - நாட்டுப் பசுக்களிடமிருந்து பெறப்படும் முக்கியமான பொருள்கள்” (Scientific Utilisation Through Research Augmentation - Prime Products from Indigenous Cows) என்பதைக் குறிக்கின்றது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.
இந்திய நாட்டு மாடுகளிலிருந்துப் பெறப்பட்ட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் முழுமையான தன்மை குறித்த அறிவியல் ஆராய்ச்சியே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.