இந்திய ராணுவமானது, போர்க்களத்தில் பயன்படுத்துவதற்காக, முதலாவது பன்முகப் பயன்பாடு கொண்ட ஒரு ஆளில்லா வான்வழி வாகன (UAV) அமைப்பை வாங்கத் தொடங்கியுள்ளது.
இராணுவப் பயன்பாடுகளுக்காக என்று அறிமுகப்படுத்தப்படும் உலகின் முதல் செயல்பாட்டில் உள்ள உயர் ஆற்றல் செயல்திறன் கொண்ட SWARM ஆளில்லா வான்வழி வாகன அமைப்பு இதுவே ஆகும்.
பெங்களூரு நகரில் அமைந்துள்ள நியூஸ்பேஸ் ரிசர்ச் & டெக்னாலஜிஸ் என்ற இந்தியப் புத்தொழில் நிறுவனம் மூலம் அவை விநியோகிக்கப்படுகின்றன.
100 ஆளில்லா விமானங்கள் கொண்ட ஒரு தொகுதியானது, குறைந்தது எதிரி நாட்டின் பிரதேசத்தினுள் 50 கிலோமீட்டர் தொலைவில் வரை உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
அவை மேம்பட்டத் தன்னியக்கம், கணினிமயம், தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளைப் பயன்படுத்தி, குறைந்தபட்ச மனித ஈடுபாட்டுடன் பல்வேறு பணிகளைச் செயல்படுத்துகின்றன.