SWIFT வலையமைப்பின் சேவைகளில் இருந்து ரஷ்யா விலக்கப் படுவதாக ரஷ்யா நாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டுள்ளது.
உலகளவிலான வங்கிகளுக்கிடையிலான நிதித் தொடர்புச் சமூக அமைப்பு (SWIFT - Society for Worldwide Interbank Financial Telecommunication) என்பது ஒரு சர்வதேச செய்தி அனுப்பும் தொழில்நுட்ப வலையமைப்பு ஆகும்.
உலகளவில் சுமூகமான பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக வேண்டி இந்தத் தொழில்நுட்பமானது உலகளாவிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப் படுகிறது.
இது 1973 ஆம் ஆண்டில் பெல்ஜியம் நகரில் நிறுவப்பட்டது.
SWIFT என்பது எந்தப் பத்திரங்களையும் அல்லது பணத்தையும் வைத்திருக்காத அல்லது வெளி வாடிக்கையாளர் கணக்குகளை நிர்வகிக்காத, செய்திகளை மட்டுமே அனுப்பும் ஒரு தளமாகும்.