NESTS மற்றும் UNICEF ஆகியவை தொழில் முறை வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் மற்றும் வாழ்க்கைத் திறன்களுக்கான ஒரு தளமான TALASH (பழங்குடியினர் திறனறிவு, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சுயமரியாதை மையம்) என்ற ஒரு மையத்தினைத் தொடங்கியுள்ளன.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) இந்த தமன்னா என்ற முன்னெடுப்பினால் ஈர்க்கப்பட்ட மனோவியல் மதிப்பீடுகளை TALASH முன்னெடுப்பு பயன்படுத்துகிறது.
இதுவரையில், 75 ஏகலவ்யா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளில் இருந்து (EMRS) 189 ஆசிரியர்கள் TALASH திட்டத்திற்காக பயிற்சி பெற்றுள்ளனர்.
கௌசல்யா திட்டத்திற்காக NESTS ஆனது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
கௌசல்யா திட்டம் ஆனது வேலைவாய்ப்புப் பயிற்சியுடன் இணைந்து பொறியியல் பட்டயப் படிப்பினை வழங்குகிறது.
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆனது பழங்குடியின விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் (EMRS) பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக என NESTS முயற்சிகளைத் தொடங்கியது.
இந்தத் திட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள 130,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு ஆதரவளிக்கும்.