TNPSC Thervupettagam
March 5 , 2023 900 days 449 0
  • இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க இராணுவம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டின் சென்னை நகரில் TARKASH எனப்படும் பயிற்சியினை சமீபத்தில் மேற்கொண்டன.
  • இது தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைப் படை (SOF) ஆகியவற்றினால் மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டுப் பயிற்சியாகும்.
  • இந்தப் பயிற்சியில் முதன்முறையாக "இரசாயனம், உயிரியல், கதிரியக்கம் மற்றும் அணுசக்தி” (CBRN) சார்ந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • CBRN ஆயுதங்கள் பெருமளவிலான உயிரிழப்புகள் மற்றும் பெருமளவிலான இடையூறுகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளதால் அவை மிகப் பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
  • ஜெனீவா நெறிமுறை என்றும் அழைக்கப்படும், போரில் CBRN ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடை விதிப்பு நெறிமுறையானது, 1925 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் கையெழுத்தானது.
  • இது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 08 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • CBRN ஆயுதங்களின் சமீபத்தியப் பயன்பாடு, 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரின் போது பொதுமக்களுக்கு மீது சிரிய நாட்டின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாரின் என்ற வாயு தாக்குதலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்