இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க இராணுவம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டின் சென்னை நகரில் TARKASH எனப்படும் பயிற்சியினை சமீபத்தில் மேற்கொண்டன.
இது தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைப் படை (SOF) ஆகியவற்றினால் மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டுப் பயிற்சியாகும்.
இந்தப் பயிற்சியில் முதன்முறையாக "இரசாயனம், உயிரியல், கதிரியக்கம் மற்றும் அணுசக்தி” (CBRN) சார்ந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
CBRN ஆயுதங்கள் பெருமளவிலான உயிரிழப்புகள் மற்றும் பெருமளவிலான இடையூறுகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளதால் அவை மிகப் பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
ஜெனீவா நெறிமுறை என்றும் அழைக்கப்படும், போரில் CBRN ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடை விதிப்பு நெறிமுறையானது, 1925 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் கையெழுத்தானது.
இது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 08 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
CBRN ஆயுதங்களின் சமீபத்தியப் பயன்பாடு, 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரின் போது பொதுமக்களுக்கு மீது சிரிய நாட்டின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாரின் என்ற வாயு தாக்குதலாகும்.