குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் பிரதான் மந்திரி TB முக்த் பாரத் அபியான் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
பிரதான் மந்திரி TB முக்த் பாரத் அபியான் திட்டமானது 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலையான மேம்பாட்டு இலக்கில் (SDG) குறிப்பிடப்பட்டுள்ள 2030 ஆம் ஆண்டிற்கு பல ஆண்டுகள் முன்னதாகவே இந்தியாவில் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு தனித்துவமான அழைப்பினை விடுத்துள்ளார்.
முர்மு அவர்கள் நி-க்சய் மித்ரா முன்னெடுப்பினையும் தொடங்கி வைத்தார்.
நி-க்சய் மித்ரா முன்னெடுப்பானது, சிகிச்சையில் இருக்கும் காசநோயாளிகளுக்கு உதவ முன்வரும் நன்கொடையாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்கும்.
நன்கொடையாளர்கள் நி-க்சய் மித்ராக்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
மேலும் இந்த நன்கொடையில் ஊட்டச்சத்து சார்ந்த, கூடுதல் நோய் கண்டறிதல் மற்றும் முழு அளவிலான ஆதரவு ஆகியவை அடங்கும்.