ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் துபாயில் அமீரகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களுக்கான பயிற்சி என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இது சர்வதேச அளவிலான திறன் இந்தியா திட்டத்தின் கீழான ஒரு முன்னெடுப்பாகும்.
இத்திட்டமானது அயல்நாட்டிலுள்ள இந்தியர்களுக்கு திறன்மேம்பாடு, சான்றிதழ் அளிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பல்வேறு திறன் சார்ந்த மற்றும் சந்தைத் தேவைகளுக்கான திறன்களை இந்தியர்கள் பெற்றிருப்பதற்குத் தேவையான ஒரு பாதையை உருவாக்குவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆரம்பகால அமலாக்கத்தின்போது, ஐக்கிய நாடுகள் அமீரகத்தில் 10000 என்ற எண்ணிக்கையில் வலுவான இந்திய தொழிலாளர் வளமானது உருவாக்கப் படும்.