TNPSC Thervupettagam

TET தேர்விலிருந்து விலக்கு கோரும் தீர்மானம்

August 27 , 2026 16 hrs 0 min 4 0
  • 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) விலக்கு கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது.
  • இத்தீர்மானம் 2009 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 23-இல் திருத்தம் செய்யக் கோருகிறது.
  • 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) தேசிய ஆசிரியர் கல்வி சபை (NCTE) கட்டாயமாக்கியது.
  • 15 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றிய சுமார் 3,28,701 ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியைத் தொடர்வதற்கு TET தேவையால் பாதிக்கப்படலாம்.
  • 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இந்த ஆசிரியர்கள் TET-இல் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து NCTE மூலம் அறிவிப்பை வெளியிட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்