TNPSC Thervupettagam

TET தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

October 6 , 2025 4 days 82 0
  • TET தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய முதல்கட்ட  மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
  • இது பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் கற்பித்தல் தகுதித் தேர்வுக்கு (TET) தகுதி பெறுவது அல்லது கட்டாயமாக ஓய்வு பெறுவது என்ற இரண்டு தேர்வுகளை வழங்கியது.
  • செப்டம்பர் 1, 2025 அன்று, நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்பின் விதி 142ன் கீழ் நீதிமன்றத்தின் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தியது.
  • நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிக் காலம் மீதமுள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அது உத்தரவிட்டது.
  • 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2010 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது.
  • ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தியது.
  • ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான ஆசிரியர்களுக்கு மட்டுமே TET தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருக்க அந்த அமர்வு வாய்ப்பு வழங்கியது.
  • இது, குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2009 என்பதின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அரசு உதவி பெறாத மற்றும் தனியார் பள்ளிகளில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
  • நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினர் அல்லாதப் பள்ளிகளில் 1-8 வகுப்புகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது "கட்டாயமாக அவர்கள் ஓய்வு பெற்றிட வேண்டும்" என்று இது கோருகிறது.
  • மேலும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் RTE சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு பெரிய அமர்வுக்குப் பரிந்துரைத்தது.
  • பிரமதி கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை வழக்கில் 2014 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அமர்வு வழங்கிய ஒரு தீர்ப்பை தற்போது இரண்டு நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு விமர்சித்துள்ளது.
  • அந்த வழக்கு சிறுபான்மை நிறுவனங்களை RTE சட்டத்தின் வரம்பிற்கு முற்றிலும் வெளியே கொண்டு சென்றது.
  • சமீபத்திய 1 ஆம் தேதி தீர்ப்பு, மதம் அல்லது மொழியியல் ரீதியாக சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை RTE சட்டத்தின் வரம்பிற்குள்  கொண்டு வருவதற்கு வலுவான வாதத்தை முன்வைத்தது.
  • இச்சர்ச்சையின் மையத்தில் RTE சட்டத்தின் பிரிவு 23ன் விளக்கம் உள்ளது.
  • அதன் படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) அமைப்பானது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயித்துள்ளது.
  • இது ஆகஸ்ட் 23, 2010 அன்று அதன் அறிவிப்பின் மூலம் அறிவிக்கப் பட்டது.
  • ஒரு அத்தியாவசிய தகுதி என்பது பொருத்தமான அரசாங்கத்தால் நடத்தப் படும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவதாகும்.
  • ஆசிரியர் தேர்வுச் செயல்பாட்டில் தேசியத் தரநிலைகள் மற்றும் ஆசிரியர் தரத்தின் அளவுகோலைக் கொண்டு வருவதே TET தேர்வைச் சேர்ப்பதற்கான காரணம் ஆகும்.
  • ஆனால் RTE சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்னோக்கிப் பயன்படுத்த முடியாது என்று தமிழ்நாடு வாதிட்டது.
  • தமிழ்நாடு தனது மறு ஆய்வு மனுவில், பிரிவு 23(1) என்பது எதிர்கால ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிட்டது.
  • மேலும் பிரிவு 23(2)  என்பதையும் தமிழக அரசு குறிப்பிட்டது.
  • இப்பிரிவானது மாநிலங்களானவை ஆசிரியர் பற்றாக்குறை அல்லது நிறுவனப் பற்றாக்குறை போன்ற தற்செயல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை தளர்த்த ஒரு அறிவிப்பின் மூலம் மத்திய அரசிற்கு இது அதிகாரம் அளிக்கும்.
  • பிரிவு 23 உடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நிபந்தனையானது, RTE சட்டம் தொடங்கப்பட்ட போது குறைந்தபட்சத் தகுதிகள் (TET) இல்லாத எந்தவொரு ஆசிரியரும் ஐந்து ஆண்டுகளுக்குள் அத்தகைய தகுதிகளைப் பெற வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
  • பிரிவு 23 என்பது TET-க்கு "பொதுவான ஆணையை" கோரவில்லை அல்லது குறைந்தபட்சத் தகுதிகள் (TET) அறிவிக்கப் படுவதற்கு முன்பு செல்லுபடியாகும் வகையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பின்னோக்கி தகுதி நீக்கம் செய்ய என்று இவ்விதியின் விளக்கத்தை நீட்டிக்க முடியாது.
  • ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரில் ஒருவரால் பொதுவாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
  • இது நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோருகிறது.
  • மறு ஆய்வு மனு அடிப்படையில் எந்த தரப்பினரும், வழக்கறிஞர்(கள்), வழக்குரைஞர்கள் அல்லது யாருடைய முன்னிலையிலும் இல்லாமல் ஒரு அறை விசாரணையில் விசாரிக்கப் படுகிறது.
  • முந்தைய உத்தரவு/தீர்ப்பை அறிவித்த அதே நீதிபதி(கள்) இவ்வழக்கை மீண்டும் விசாரித்து, இவ்வழக்கை ஆராய்ந்த பிறகு ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார்.
  • இந்த விஷயத்தில் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க நீதிபதிகள் சுமார் அரை மணி நேரம் அல்லது அதற்கும் மேலான நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்