அமெரிக்க பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்ட THAAD (Terminal High Altitude Area Defence) எறிகணை பாதுகாப்பு அமைப்பு, 2026 ஆம் ஆண்டு இஸ்ரேல்-ஈரான் மோதலின் போது கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணைகளை இடைமறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
THAAD என்பது குறுகிய, நடுத்தர மற்றும் வரையறுக்கப்பட்ட இடைநிலைத் தொலைவு கொண்ட எறிகணைகளை அவற்றின் இறுதிப் பயணக் கட்டத்தில் இடைமறித்து அழிக்கும் ஒரு மேம்பட்ட அமைப்பாகும்.
இது வெடிபொருட்களுக்குப் பதிலாக, இலக்கு எறிகணையின் மீது நேரடியாக மோதி அதன் இயக்க ஆற்றல் மூலம் அதனைத் தகர்க்கும் "மோதி அழித்தல்" (Hit-to-kill) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பு சுமார் 150–200 கிலோமீட்டர் தொலைவிலும், புவியின் வளி மண்டலத்திற்கு உள்ளே அல்லது வெளியே அதிக உயரத்தில் எறிகணைகளை இடை மறிக்கும் திறன் கொண்டது.
இது உந்துவிசை எறிகணை பாதுகாப்பு அமைப்பின் (BMDS) ஒரு பகுதியாகச் செயல் படுகிறது மற்றும் MIM-104 பேட்ரியாட் போன்ற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியது.