டைம்ஸ் உயர் கல்வி நிறுவனமானது (Times Higher Education - THE) 2026 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை வெளியிட்டது.
இந்திய அறிவியல் நிறுவனமானது (IISc), ஆசிய அளவில் 43வது இடத்தைப் பிடித்து, இந்தியக் கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.
தரவரிசைப்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் 128 பல்கலைக்கழகங்களுடன் இந்தியா அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சீனா உள்ளன.
சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், IIT இந்தூர், சூலினி பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் பிற சிறந்த கல்வி நிறுவனங்களில் அடங்கும்.
சிங்குவா பல்கலைக்கழகம், பீக்கிங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் ஆகியவை ஆசியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் அடங்கும்.