The coldest year of the rest of their lives அறிக்கை
November 4 , 2022 1031 days 589 0
யுனிசெப் அமைப்பானது, சமீபத்தில் "The coldest year of the rest of their lives" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
2050 ஆம் ஆண்டிற்குள் எத்தனை குழந்தைகள் பின்வரும் 4 வகை வெப்ப அலைகளின் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதற்கான மதிப்பீடுகளை இது வழங்கியது.
அந்த 4 வகை பாதிப்புகள் - அதிக வெப்ப அலை அதிர்வெண், அதிக வெப்ப அலை கால அளவு, வெப்ப அலையின் அதிக தீவிரம் மற்றும் மிக அதிக வெப்பநிலை.
"குறைந்த பசுமை இல்ல வாயு உமிழ்வு சூழ்நிலை" (1.7 டிகிரி செல்சியஸ் வெப்ப மயமாதல்) மற்றும் "மிக அதிகப் பசுமை இல்ல வாயு உமிழ்வு சூழ்நிலை" (2.4 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல்) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை மதிப்பீடு செய்யப்பட்டது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அலைகள் தவிர்க்க முடியாத ஆபத்தாக மாறி பூமியில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் பாதிக்கும்.
சுமார் 624 மில்லியன் குழந்தைகள் தற்போது மற்ற மூன்று உயர் வெப்பச் செயல்பாடுகளுள் ஒன்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
2050 ஆம் ஆண்டிற்குள் வடக்குப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் வெப்ப அலையின் தீவிரத் தன்மையில் மிகவும் வியத்தகு அதிகரிப்பின் தாக்கத்தினை எதிர்கொள்வர்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் கிட்டத்தட்ட 50 சதவீத குழந்தைகள் மிக அதிக வெப்ப நிலையினால் தொடர்ந்து பாதிக்கப்படுவர்.