TNPSC Thervupettagam

THE ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2026

May 7 , 2026 3 days 62 0
  • டைம்ஸ் உயர் கல்வி நிறுவனமானது (Times Higher Education - THE) 2026 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை வெளியிட்டது.
  • இந்திய அறிவியல் நிறுவனமானது (IISc), ஆசிய அளவில் 43வது இடத்தைப் பிடித்து, இந்தியக் கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.
  • தரவரிசைப்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் 128 பல்கலைக்கழகங்களுடன் இந்தியா அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சீனா உள்ளன.
  • சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், IIT இந்தூர், சூலினி பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் பிற சிறந்த கல்வி நிறுவனங்களில் அடங்கும்.
  • சிங்குவா பல்கலைக்கழகம், பீக்கிங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் ஆகியவை ஆசியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்