THE இதழின் பாடத்தின் அடிப்படையிலான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2025
January 29 , 2025 320 days 311 0
STEM துறைகளில் மிகவும் நீண்ட காலமாக முன்னணியில் இருந்த மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) ஆனது, கலை மற்றும் மனிதநேயத் துறையின் தர வரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.
இதில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆனது கல்வி சார் ஆய்வுகள், சட்டம் மற்றும் உளவியலில் ஆகியவற்றில் தனது முன்னணி நிலையினைத் தக்க வைத்துள்ளது.
இதில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆனது, பொறியியல் மற்றும் வாழ்க்கை மீதான அறிவியலில் தனது முன்னணி நிலையை உறுதிப்படுத்தியது என்ற ஒரு நிலையில் கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆனது (கால்டெக்) இயற்பியல் அறிவியலில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கணினி அறிவியல், மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டிலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முன்னணியில் உள்ளது.
தனிப்பட்ட பாட தரவரிசையில் எந்த ஆசியப் பல்கலைக்கழகமும் முதலிடத்தில் இடம் பெறவில்லை.
ஆனால் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகியவை பல துறைகளில் சிறப்பானச் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.