மீட்பால் குகல் மற்றும் மைக் ஹாபின்ஸ் மற்றும் அமெரிக்க தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஆனது "Thirstwave" என்ற ஒரு பதத்தினை உருவாக்கியுள்ளனர்.
இந்தச் சொல் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டத் தொடர்ச்சியான நாட்கள் தீவிர ஆவியாதல் தேவையைக் குறிக்கிறது.
தினசரி ஆவியாதல் தேவையானது, குறைந்தது மூன்று நாட்களுக்கு மேல் இதுவரை பதிவான 90வது சதவீதத்திற்கு மேல் இருக்கும் போது Thirstwave ஏற்படுகிறது.
ஆவியாதல் தேவை என்பது வளிமண்டலம் எவ்வளவு நீரை ஆவியாக்குகிறது அல்லது நிலம் அல்லது தாவரங்களிலிருந்து எவ்வளவு தண்ணீரை உறிஞ்ச இயலும் என்பதைக் குறிக்கிறது.
இது வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியினால் தாக்கத்திற்கு உள்ளாகிறது.