TIME இதழின் உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியல் 2024
September 19 , 2024 293 days 328 0
TIME இதழின் 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி நிறுவனமாக HCL டெக் பட்டியலிடப்பட்டுள்ளது.
HCL டெக் நிறுவனம் 112வது இடத்திலும், இன்ஃபோசிஸ் 119வது இடத்திலும், விப்ரோ 134 இடத்திலும் உள்ளன.
மஹிந்திரா குழுமம், ஆக்சிஸ் வங்கி, SBI, ICICI வங்கி, L&D, கோட்டக் மஹிந்திரா வங்கி, ITC லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இதர முன்னணி இந்திய நிறுவனங்களாகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து அயர்லாந்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் இடம் பெற்றுள்ளது.
மைக்ரோசாப்ட், BMW குழுமம், மற்றும் அமேசான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இடம் பெற்றுள்ளன.