TNPSC Thervupettagam

TIR-ன் கீழ் முதல் சரக்கு பரிமாற்றம்

March 16 , 2019 2313 days 718 0
  • ஐக்கிய நாடுகளின் “டிரான்ஸ்போர்ட்ஸ் இன்டர்நேசனக்ஸ் ரூட்டியர்ஸ்” (Transports Internationaux Routiers - TIR) எனும் ஒப்பந்தத்தின் கீழ் முதலாவது சரக்குப் பெட்டகம் ஈரானின் சாபஹார் துறைமுகத்தின் வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது.
  • TIR ஒப்பந்தத்தின் கீழ் அனுப்பப்படும் சர்வதேச சரக்குப் பெட்டகங்கள் சுங்க அதிகாரிகள் மூலம் குறைந்தபட்ச சோதனைக்குள் உட்படுத்தப்படும்.
  • சுங்க அமைப்புகளின் பரஸ்பர அங்கீகாரம் TIR ஒப்பந்தத்தின் மையப் பகுதியாக இருக்கின்றது.
  • சுங்க அதிகாரிகள் ஆவணங்களை மட்டுமே சோதனை செய்வர். மேலும் சரக்குப் பொருட்களின் அளவுகளை சோதனையிடாமல் வெறும் முத்திரைகளை மட்டுமே சோதனை செய்வர்.
  • இந்த நடைமுறை சரக்குப் பொருட்களானது எல்லைப்பகுதிகளில் திறக்கப்படாமல் நாடுகளுக்கு மத்தியில் அனுப்பிட இயலச் செய்யும்.
  • இந்த ஒப்பந்தம் பலமாதிரி முறைகள் கொண்ட போக்குவரத்துப் பாதைகளான சாபஹார் மற்றும் சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து பெருவழிப் பாதைகளைப் பயன்படுத்தி பொருட்களை அனுப்பிட ஒரு வலுவான ஊக்கப் பொருளாக இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்