டாடா மெமோரியல் சென்டர் (TMC) மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், சிறுநீர்ப்பை கூடுதல் கதிரியக்க சிகிச்சை (BART) சோதனையில், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கதிர்வீச்சு சிகிச்சையானது அதிக ஆபத்துள்ள சிறுநீர்ப் பை புற்றுநோய் கொண்ட நோயாளிகளில் இடுப்பு பகுதியில் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதைக் கணிசமாகக் குறைக்கிறது என்பதைக் காட்டியது.
2016 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட BART சோதனை, 150க்கும் மேற்பட்ட நோயாளிகளில் மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சிஸ்டெக்டோமி சிகிச்சையை (சிறுநீர்ப் பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்) தொடர்ந்து தசையில் ஊடுருவும் சிறுநீர்ப்பை புற்றுநோய் (MIBC) மீது இந்த ஆய்வு கவனம் செலுத்தியது.
கதிர்வீச்சு சிகிச்சை ஆனது இடுப்புப் பகுதியில் புற்றுநோய் மீண்டும் வருவதை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைத்தது.
தீவிர நவீன கதிர்வீச்சு சிகிச்சை (IMRT) போன்ற நவீன துல்லிய நுட்பங்கள், பக்க விளைவுகளைக் குறைத்தன.
மேம்பட்ட நிலையிலான புற்றுநோய்க் கட்டி நிலைகள், நிணநீர் முனை உருவாக்கம் அல்லது அறுவை சிகிச்சை செய்யப்பட பகுதிகளில் கட்டி உருவாக்கம் கொண்ட அதிக ஆபத்துள்ள நோயாளிகள் இதன் மூலம் பயன் பெற்றனர்.