தமிழ்நாடு அரசு TN Rising என்ற புதிய பிராந்திய முதலீட்டு மாநாடுகள் தொடரைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு இங்கு ரூ.32,553.85 கோடி முதலீட்டை ஈர்த்தது.
‘TN Rising’ எனப்படும் பிராந்திய முதலீட்டு மாநாடுகள், உலகளாவியத் தொழில்துறை சக்தியாக தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை உலகிற்குக் காட்ட நமக்கு ஒரு வாய்ப்பாகும்.
இது அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்க வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதற்கான அதன் நீண்டகாலத் தொலை நோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும்.
இது சமச்சீர் பிராந்திய வளர்ச்சி மற்றும் நிலையான தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்தும்.
இதன் தொடக்க மாநாடு தூத்துக்குடியில் நடத்தப்பட்டது.