மதுரையில் நடைபெற்ற T.N. Rising (தமிழ்நாடு வளர்கிறது) உச்சி மாநாட்டில் 36,660 கோடி ரூபாய் மதிப்புள்ள 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசானது, நான்கு ஆண்டுகளில் 11.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உறுதிப்பாடுடன் கூடிய முதலீடுகளைப் பெற்று, 34 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.
மதுரை பிராந்தியம் ஆனது, புதிய தொழிற்சாலைத் திட்டங்கள் மூலம் 56,766 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விருதுநகரில் சுமார் 1,894 கோடி ரூபாய் மதிப்பில் PM MITRA (பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை) ஜவுளிப் பூங்கா கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தேனியில் ஒரு பொறியியல் பூங்கா மற்றும் உணவுப் பூங்கா மற்றும் சிவகங்கையில் ஒரு தொழில்துறைப் பூங்காக்கள் ஆகியவை இந்தப் புதிய பூங்காக்களில் அடங்கும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டம் மற்றும் பெய் ஹை நிறுவனத்தின் தோல் பொருட்கள் சாராத காலணி உற்பத்தி அலகு ஆகியவை புதிய முதலீடுகளின் ஒரு பகுதியாகும்.