TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 24 , 2018 2957 days 1319 0
  • கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அனில் குமார் ஜா நியமிக்கப்பட்டுள்ளார் தற்போது மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் CMD ஆக ஜா உள்ளார். 2020 ஜனவரி 30 வரை இவர் இப்பதவியில் இருப்பார்.
  • கோபன்ஹெகனில் உள்ள ராயல் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பனிஹாக்கி உலககோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெனால்டி சூட் அவுட்டில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி, சுவீடன் பனிஹாக்கி “சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது”. ஓராண்டிற்கு முன்பு சுவீடன் கனடாவை வீழ்த்தி இச்சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • இங்கிலாந்து நாட்டின் தேசிய குற்ற நிறுவனமானது தன்னுடைய அறிக்கையில் இங்கிலாந்து நாட்டில் பண மோசடிக்கான மூன்று முன்னணி மூல ஆதாரங்களின் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டை பட்டியலிட்டுள்ளது. பிற இரு நாடுகளாவன நைஜீரியா மற்றும் இரஷ்யா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்